
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நேற்று (11) வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கீரிமலையில் அமைந்துள்ள நாராயணன் சுவாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றினை சுத்தம் செய்யும் போதே இவ்வாறு குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அங்கிருந்த ஆர்.பி.ஜி குண்டு மற்றும் 81mm குண்டு என்பவற்றை மீட்டுள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.