
பெங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த மூன்று பெண்கள் குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிக்கும் 25, 48 மற்றும் 50 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 5 கிலோ 248 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.