பெண் போல் வேடமணிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்கள்- யாழ். கோவிலில் சம்பவம்!

இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்று (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த நான்கு ஆண் திருடர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற இணுவில் மஞ்சத்தடி முருகன் ஆலய தேர்த்திருவிழாவின் போது 4 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply