
தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
அதன்படி உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளின் தரவுகள் உள்ளிட்ட ஏனைய விபரங்களைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதிகாரிகளின் தரவுகள் மற்றும் வாகன விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறு முன்னரே அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், சில நிறுவனங்களிடமிருந்து குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.