
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத் கொழும்பு- வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மேல் தளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (22) இரவு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (24) கொலை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.