நாளை அதிகாலை கிழக்கு வானில் தோன்றும் அரிய காட்சி!

நாளை (25) அதிகாலை கிழக்கு வானில் பூமிக்கு மிக அருகில் வௌ்ளி, சனி மற்றும் சந்திரன் ஆகிய கோள்கள் தோன்றும் காட்சியை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக அடஸ்சூரிய தெரிவித்தார்.

நாளை அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானத்தைப் பார்க்கும் போது ​​இந்த மூன்று கோள்களும் மிக அருகில் தெரியும் எனவும், இதனை வெற்று கண்களால் பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு அரிய சந்தர்ப்பம் எனவும், கிழக்கு அடிவானம் தெளிவாக இருக்கும் இடத்தில் இக்காட்சி தென்படும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply