கழிவு நகரமாக மாறியுள்ள கண்டி!

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விழாவை காண்பதற்காக சிற்றுண்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வரும் பக்தர்கள், கழிவுகளை அங்கேயே விட்டுச்செல்கின்றனர்.

இதனால் நகரத்தின் தெருக்களில் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் மட்டுமல்லாது மலம் கழித்த பொலிதீன் பைகள் மற்றும் சிறுநீர் நிரப்பப்பட்ட போத்தல்கள் சிதறிக்கிடப்பதாகவும் நகர்ப்புறவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனினும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தங்களுக்கு குப்பைகளை வீச சரியான இடங்களை ஒதுக்கி தரவில்லை எனக் கூறுகின்றனர்

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply