யாழ் பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் கிணற்று தொட்டியின் அடியில் இருந்து சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் வீட்டு கிணற்று தொட்டியின் அடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட உடல் சுகயீனம் காரணமாக மருந்து வாங்குவதற்காக கணவனை கடைக்கு அனுப்பியுள்ளார்.

கணவன் மருந்து வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி தண்ணீர் தொட்டியின் அடியில் சடலமாக காணப்பட்டதை அவதானித்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டிருந்தார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் குறித்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply