
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ். பாசையூருக்கு இன்றையதினம் (25) கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணத்தின் போது அமைச்சர் பாசையூர் மீன் சந்தை, இறங்குதுறை பாசையூரிலுள்ள சென். அன்ரனிஸ் மைதானம் என்பவற்றுக்கு சென்று கண்காணிப்பை மேற்கொண்டிருந்தார்.
அத்துடன் பாசையூர் கடற்றொழில் சங்கத்துடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் மற்றும் மக்களால் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் பாசையூரிலுள்ள சென். அன்ரனிஸ் மைதானத்துக்கும் அமைச்சர் சென்றிருந்த வேளையில், மைதானத்தை விருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அமைச்சர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.