
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து, இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.