
கொழும்பு விஷாகா வித்யாலயத்தைச் சேர்ந்த மாணவி ரனுலி விஜேவர்தன என்பவர், ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற, 2023ஆம் கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றி, 8 பாடங்களில் ஏ (A) சித்திகள் மற்றும் ஒரு பி (B) சித்தியினைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற, 2024ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான உயர்தரப் பரீட்சையில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி அதிலும் 3 ஏ சித்திகளை பெற்று விசேட சாதனைப் படைத்துள்ளார்.