புனித வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி 4 பெண் கைதிகளும் 384 ஆண் கைதிகளும் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் இவ்வாறு எஞ்சிய தண்டனை காலம் இரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply