
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24ஆம் திகதி ஆரம்பமான நிலையில் 25, 28, மற்றும் 29ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்குப்பதிவு மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று தபால்மூல வாக்கு பதிவுக்கான இறுதி நாளாகும்.
இதுவரையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இதுவரையில் சுமார் 90 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளநிலையில், இன்றுடன் அது நிறைவடைய உள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.