எரிபொருள் விலை விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித திருத்தமும் செய்யப்படாது!

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலை விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை

இந்த நேரத்தில் நாங்கள் கட்டணங்களைக் குறைப்போம் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது.

ஆண்டுதோறும் நடைபெறும் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக ஜூலை மாதம் கலந்துரையாடப்படும். இதன் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும். இந்த மாதம் பேருந்து கட்டணங்களைக் குறைப்பதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறு இல்லை.

எரிபொருள் விலை மட்டும் பேருந்து கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல என்றும், மற்ற அனைத்து செலவுகளும் அதிகரித்துள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும் பேருந்து கட்டணங்களை மாற்றியமைக்க, டீசல் விலையை 25-30 ரூபாவால் குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் இது தொடர்பிலான முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் சமீபத்தில் மேற்கு மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களை ஒழுங்குபடுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, அவர்கள் முச்சக்கர வண்டிகளுக்கு புதிய நிலையான கட்டணங்களை நிர்ணயித்தனர்.

முன்னதாக, முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபா மற்றும் கூடுதல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 90 ரூபா என கட்டணத்தை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் ஒருபோதும் அது செயல்படுத்தப்படவில்லை.

எனவே முச்சக்கர வண்டி கட்டணங்களைக் குறைக்க நாங்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அது மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply