
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று (01) இரவு இறைபதம் அடைந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் வைத்திய சிகிச்சை பெறவந்திருந்த அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் இறைபதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது திருவுடல் இன்றையதினம் (02) யாழ்ப்பாணம் ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, மாலை சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981இல் பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்து அறமாற்றியவராக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.