
நாடளாவிய ரீதியில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலகெதர மினிகமுவவில் வசிக்கும் 33 வயதுடைய கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என்ற பெண் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஆவார்.
திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம் காரணமாக, சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.