
தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று (07) சரணடைந்துள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரச காணி ஒன்றுக்கு போலியான ஒரு உறுதிப்பத்திரம் செய்து அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் தொடரும் வழக்கில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர ஆஜராகமையால் அவருக்கு பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று அவர் தனது சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.