நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட சமந்த ரணசிங்க!

சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர காலமானதால் நிலவிய வெற்றிடத்துக்கு பதிலாக சமந்த ரணசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் சமந்த ரணசிங்க தேசிய மக்கள் சக்தியின் ரம்புக்கனை தேர்தல் அமைப்பாளராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply