
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று (09) முதல் 13ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலும், கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலும் மற்றும் கொழும்பு கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலும் இந்த விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.