
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான கரணம் தொடர்பில் ஆராயும் பொருட்டு, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையிலான இந்தக் குழுவில், மேலும் நான்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.