
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்த போதிலும், அதனை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் எனவும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே சந்தையில் உப்பு விலை அதிகரித்துள்ளதாகவும் இதனால், 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்நிலையில் உப்பு விலை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதற்கு தேவையான சோதனை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.