யாழ். வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்- அச்சத்தில் மக்கள்!

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல் தொடந்து நடைபெற்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் மக்கள் குடியிருப்புகளின் நடுவே மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.

முன்னதாக மணல் திட்டியாக இருந்த பகுதிகளில் இருந்து மணல் எடுத்து செல்லப்பட்டது.

தற்போது கிராமப் பகுதியில் அதிகமாக கட்டிடங்கள் அமைக்கப்படுவதனால் மணல் அனுமதி கொடுக்கப்படாத நிலையில் மக்கள் குடியிருப்புகள் நடுவில் கள்ள மண் கடத்தல் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு கள்ள மண் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாயின் இக் கிராமப்பகுதியில் பாரிய நீர்த்தேக்கம் ஏற்பட்டு மழைக்காலத்தில் உயிர் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply