குருந்தூர் மலை காணிகளை தமிழருக்கு வழங்குவது பாரிய ஆபத்து!

முல்லைத்தீவு குருந்தூர்மலை விகாரைக்கு சொந்தமில்லாத சுற்றுப்புறக் காணிகளை தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொல்பொருள் ஆய்வாளர் வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குருந்தூர் விகாரையை சூழவுள்ள காணிகள் இனவாதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் கைகளுக்குச் சென்றால் எதிர்காலத்தில் அந்தப் பிரதேசம் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அந்த கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குருந்தூர் விகாரையைச் சுற்றிலும் பல்வேறு புத்த மடாலயங்களின் இடிபாடுகள் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன.

எனவே, இந்த நிலங்களை தமிழருக்கு பகிர்ந்தளிப்பது ஏற்புடையதல்ல. மேலும், பௌத்த விகாரைக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் மக்களுக்கு காணி வழங்குவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பௌத்த இடிபாடுகளுக்கு அருகில் போராட்டங்களை ஆதரிக்கும் குடியிருப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் அந்த நிலத்தை அரசு கொடுத்ததோ இல்லையோ வலுக்கட்டாயமாக அபகரித்து விட்டதாகவே தெரிகிறது.

எனவே இந்த காணிகளின் உரிமையை மாற்றக்கூடாது எனவும் எதிர்காலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply