அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர்.
அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 21 ஆம் திகதி அங்குருவாதொட்ட ரத்மல்கொட காட்டுப் பகுதியில் சடலங்களாக, கண்டெடுக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளும் போதே இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் பெண்ணின் கணவரை மிரட்டியதால் அங்கிருந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், மோதலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.