இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவாக தீர்வுகள் வழங்கப்படும்!

இலங்கை கடல் பரப்புக்குள் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் நுழைவதைத் தடுக்க தேவையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு கூறினார்.

அதற்கமைய, இலங்கை மீனவர்களை பாதித்துள்ள இந்த பிரச்சினைக்கு முரண்பாட்டு வழியில்லாமல் உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் தமிழகத்துடனும், இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply