முன்னாள் ஜனாதிபதியின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும்- துமிந்த நாகமுவ!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அல்ஜஷீராவுக்கு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியதன் ஊடாக, அந்த அறிக்கை அரச கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படாத ஒன்று எனக் குறிப்பிடுவதாக துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.

ஜனாதிபதியினால் குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாகவும், அவ்வாறானால் அப்போதைய ஜனாதிபதி எதற்காக அதன் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயணத்தைப் பாதுகாப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார் என குற்றம் சுமத்திய அவர் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதனால் ஜே.வி.பி பெரும்பான்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அரசாங்கத்தின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து அந்த பணியை அது நிறைவேற்றுமா என்பதைப் பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply