
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை (09) இடம்பெறவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இந்த கூடத்தின் போது, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் நாளைய தினம் அவதானம் செலுத்தப்படும் என சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.