
மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து திருட்டு செயலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 24ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பெண்கள் வீட்டில் இருந்த 63,900 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக, மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் மூவரும் நேற்று (03) பிற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ பொலிஸ் பிரிவின் கொரலவெல்ல மற்றும் மொரட்டுவ பகுதிகளில் வசிக்கும் 33 மற்றும் 47 வயதுடைய நபர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.