எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் பலி- குருநாகல் பகுதியில் சம்பவம்!

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (07) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்து சம்பவத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறி ஒன்று நேற்று இரவு வாயு நிரப்புவதற்காக வந்து, வாயு நிரப்பும் போது 6,000 லீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு வாயு தொட்டிகளில் ஒன்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

வெடிக்காத மற்றொரு 6,000 லீற்றர் வாயு தொட்டியை மாநகர சபை ஊழியர்கள் மிகுந்த முயற்சியுடன் மூடியதால், ஏற்படவிருந்த பாரிய சேதம் ஓரளவு குறைக்கப்பட்டது.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply