
இலங்கையின் தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து கூறுகையில்,
அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருகிறது. ஆனால் இதை நிவர்த்தி செய்ய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை.
தற்போது கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது.
தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு தாங்க முடியாத அளவு பணிச்சுமை உள்ளது. உயர்தர பாடங்களுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு ஆங்கில வழி பட்டதாரிகள் தேவை. தகவல் தொழில்நுட்ப (IT) ஆசிரியர்களும் தேவை. ஆனால் அவர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இது ஒரு பாரதூரமான நெருக்கடி என்று அவர் தெரிவித்தார்.