
நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பொலிஸ் வீதி தடுப்பில் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நபர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்த, ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 37 வயதுடைய அதிகாரி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வேன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் சாரதி குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.