
குளியாப்பிட்டி கலஹிடியாவ பகுதியில் பெண் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.
புனித மெத்தீவ் மாவத்தை, ஏகல பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 35 வயதான நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில்,
உயிரிழந்த பெண்ணும், சந்தேக நபரும் சுமார் 4 மாதங்களாக ஒரு வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர் என்றும், இதன்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.