நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிடைக்கப்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில், மார்ச் 3ஆம் திகதி முதல் இதுவரை 13 மொத்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் (08) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், மார்ச் 3ஆம் திகதி முதல் இன்றுவரை பதிவான மொத்த குற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 24 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply