டிரம்பின் வரி விதிப்பு தாக்கம்- கலந்துரையாடலுக்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (10) கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பிலான கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X தளத்தில் ஒரு குறிப்பொன்றையிட்டு தெரிவித்துள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply