
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கட்சித் தலைவர்களுக்கு நேற்று (09) அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, இது தொடர்பிலான கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) ஆரம்பமாகியுள்ளது.