
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரி, கொழும்பில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (24) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த “பட்டக் கடைகள்” தகுதியற்ற பட்டதாரிகளை உருவாக்குதுடன், இவ்வாறான பட்டதாரிகளால் உயிர்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது போன்ற நிறுவனங்கள், நாட்டினுடைய சுகாதார அமைப்பின் தரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அரச பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிற்குட்படுத்துவதாகவும் ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே சுகாதாரத் துறையில் ஒழுங்குபடுத்தப்படாத தனியார் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, சுகாதாரம் தொடர்பான பட்டங்களை வழங்கும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்களை இல்லாதொழிக்குமாறு கோரியும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.