
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக நியமிக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கு பெயர் ஒன்றை பரிந்துரை செய்யுமாறு சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு நிலையியல் கட்டளைகளின்படி, இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறித்த குழுவிற்கு மொத்தம் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதில் ஒரு உறுப்பினர் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட வேண்டும். மேலும், பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் இந்தக் குழுவின் நிரந்தர உறுப்பினராக செயல்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.