வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கெஸ்பேவ, மடபாத்த, மாகந்தன, பட்டுவந்தர பகுதிகளில் உள்ள வீட்டொன்றில் இருந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று இரவு (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது உடல் மிகவும் சிதைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில உள்ள நீதவான் விசாரணை இன்று (29) இடம்பெறவுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply