மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கிற்கு பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் தாம் எவ்வாறு மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு துறைநீலாவணை தமிழரசுக் கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை தின நிகழ்வு நேற்று மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஜூலைக் கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், காரைதீவுப் பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் தமிழசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் உட்பட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply